கலைமகள்: சைதன்யரை எழுத்தில் மட்டும் அல்ல, வண்ணத்திலும் நான்கு பக்கங்களில் பார்க்கலாம். குன்னக்குடி ரவாதோசைப் பிரியர், சுதாரகுநாதனுக்கு டீ பிடிக்கும், நித்ய ஸ்ரீ மகாதேவனுக்கு பாதி ஊத்தப்பம் சாப்பிடுவார். ஏசுதாசுக்கு இடியாப்பம் குருமா பிடிக்கும் என்று அடுக்குகிறார் அறுசுவை நடராஜன். இது வித்தியாசமான தகவல். சினிமா எடிட்டர் லெனின் உடன் ஒரு நேர்முகம், இளைய தளபதி விஜய்யுடன் ஒரு சந்திப்பு, அப்துல் கலாம் சொந்த ஊர் பற்றிய வர்ணனை என்று மலருக்கு மகத்துவம் தரும் படைப்புகள் பல உண்டு.
திருப்பூர் கிருஷ்ணன் உட்பட பலரது தமிழ்ப் படைப்புகள், இந்திரா சௌந்தரராஜன், உமாகல்யாணி, திலகவதி, சீதா முருகேசன் ஆகியோரின் எழுத்தோவியங்கள் மலருக்கு அழகு தருகிறது. சிறுவர் பகுதியும் மலரில் உண்டு. தென்கச்சி சுவாமிநாதனின் தெளிவு தரும் படைப்பு, சௌந்திரா கைலாசம் உட்பட பலரது கவிதைகள் எல்லாமே கலைமகள் பாரம்பரியத்திற்கு கட்டியம் கூறுகின்றன, தீபாவளிக்கு நல்லதொரு அறிவு விருந்தாக மலர் வெளிவந்திருக்கிறது.