அமுதசுரபி: (விலை ரூ.80-00) தேரில் கண்ணன், பூந்தட்டுடன் ருக்மணி, அன்புக்காதலி ருக்மணியும் அந்தச் சூழலையும் அப்படியே கோபுலுவின் கைவண்ணத்தில் முகப்பு அட்டையாக பொலிந்து நிற்கிறது. பிரார்த்தனை செய்தால் எல்லாம் கிடைக்கும் என்ற அன்னையின் கருத்து, பாரதத்திற்கு அடுத்த இரு ஆண்டுகள் சரியில்லை என்ற சோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் கணிப்பு, புள்ளிப் பிரச்னையைத் தீர்த்து வைத்த கற்பக விநாயகர் பற்றி ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆழ்ந்த நோக்கு ஆகியவை மலரின் முதல் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.ச்ஜிலேபியின் வரலாறு "சுஷ்ருத சம்ஹிதா'வில் உள்ளதாகக் கூறும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, வீணை வாசித்த கதையைப் பற்றி ஜெயகாந்தன் அளித்த நேர்காணல், கலைவாணர் பற்றி தென்கச்சி சுவாமிநாதன், சாளக்கிராம மூர்த்தங்கள் பற்றி பருத்தியூர் சந்தான ராமன், நெல்லை சு.முத்துவின் அறிவியல் பார்வை , சுவாமி சின்மயானந்தாஜீ குறித்த ஜனகன் நோக்கு ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.
இந்த மலரில் எழுத்தாளர்கள், ஓவியர்கள் புகைப்படங்கள், குறிப்புகள் இடம் பெற்றிருப்பது வித்தியாசமானது . சுவாமி கமலாத்மானந்தர், அசோக மித்ரன், ராஜம் கிருஷ்ணன், படுதலம் சுகுமாறன், பா.ராகவன், சிவசங்கரி ஆகியோரின் முத்தான படைப்புகளும், கவிதைகளுக்கும் பஞ்சம் இல்லை.
இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மலராக மலர்ந்திருக்கிறது.