கோபுர தரிசனம்: முகப்பு அட்டையில் ஓவியர் துர்கா படைப்பில் கிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் இருக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கண்ணனைத் தியானித்த ருக்மணி தராசில் ஒரே ஒரு துளசி இலையைப் போட்டதும் , தராசுத்தட்டு நேராகி பாமாவின் மனத்தில் இருந்த அகந்தை அழிந்தது என்பதை திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையாக வடித்திருக்கிறார். எல்லா மந்திரங்களும் காமாட்சியைத் தான் குறிக்கின்றன என்ற மகாபெரியவரின் கருத்து மணம் சேர்க்கிறது. வினைகளைத் துதிக்கை எடுத்துத் துடைக்க விநாயகனை வெண்பாப் பாடி கவிஞர் வாலி அழைக்கிறார்.முகப்பு அட்டையில் ஓவியர் துர்கா படைப்பில் கிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் இருக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கண்ணனைத் தியானித்த ருக்மணி தராசில் ஒரே ஒரு துளசி இலையைப் போட்டதும் , தராசுத்தட்டு நேராகி பாமாவின் மனத்தில் இருந்த அகந்தை அழிந்தது என்பதை திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையாக வடித்திருக்கிறார். எல்லா மந்திரங்களும் காமாட்சியைத் தான் குறிக்கின்றன என்ற மகாபெரியவரின் கருத்து மணம் சேர்க்கிறது. வினைகளைத் துதிக்கை எடுத்துத் துடைக்க விநாயகனை வெண்பாப் பாடி கவிஞர் வாலி அழைக்கிறார்.
ராக தேவதை பற்றி காயத்ரீ கிரிஷ் விளக்குவதை சர்ச்சில் பாண்டியன் சிறப்பாக படைத்திருக்கிறார். காஞ்சியில் திருமால், ராமானுஜரின் வாழ்வில் நடந்தவை. உதயணன் -வாசவதத்தை படக்கதை ஆகியவை தீபாவளிக்கான சிறப்பு விருந்துப் படைப்புகள். பாலகுமாரன், கௌதமநீலாம்பரன், டாக்டர் சுதா சேஷய்யன் , லட்சுமி ராஜரத்தினம் எனப் பலரது படைப்புகள் மணம் சேர்க்கின்றன.
ராமர் பிறந்த அயோத்தி, வாஞ்சிநாதனின் விடுதலை வேட்கை, பாரதியின் தரிசனம் ஆகியவைகளுடன் கவிதைகள், யோகி சூரத்குமார் மற்றும் அருளாளர்கள் பற்றிய பெருமைகள் என்று மலர்ந்திருக்கிறது. ஓவியர்கள் பத்மவாசன், தாமரை, ம.செ ஆகியோர் கைவண்ணத்தில் மலரை அழகுபடுத்தி உள்ளனர்.