603. லேடீஸ் ஸ்பெஷல்: (விலை ரூ.70-00) காஞ்சி முனிவர் அருளாசியை அடுத்து விக்கிரமனின் சிறுகதையுடன் மலர் துவங்குகிறது. பாக்கியம் ராமசாமியின் "பால்குடிடேஸ்' பிரத்யட்சமான கதை, மனம் எங்கே இருக்கிறது என்று ஆய்வு செய்திருக்கிறார் சுப்ரபாலன், பத்து தினங்களில் அழைத்துச் செல்வதாகக் கூறிய ராமனிடம் கேள்வி கேட்டு ஐக்கியம் ஆன ஸ்ரீ தியாகராஜர், கோல்கட்டா பயணக்கட்டுரை, பராசக்தியின் 10 பரிமாணங்கள் பற்றி கவுசல்யா சிவகுமாரின் ஆன்மிகக் கட்டுரை , நவராத்திரி நாயகி பற்றிய நடனப் படைப்பு, என்று பல்சுவை மலராகத் திகழ்கிறது. வல்லிக்கண்ணன், முக்தா சீனிவாசன், புஷ்பா தங்கதுரை , என்.சி.மோகன் தாஸ், பாமா கோபாலன் ஆகியோரது சிறுகதைகள் , குஜராத்தி எழுத்தாளருடன் சிவசங்கரி சந்திப்பு, கவிதைகள் என்று மலர் வண்ணத்தில் வெளியாகியிருக்கிறது. தீமைகளைப் போக்கி நல்லன தரும் தீபாவளி என்று பின்னலூர் விவேகானந்தன் தரும் விளக்கம், மலையே எனக்கு குரு என்று ஸ்ரீ ரமணர் கூறியதை விளக்கும் கங்கா ராமமூர்த்தி கருத்துக்கள் சிந்திக்க வைப்பவை. ஆசை , ஆர்வத்துடன் உருவாக்கப்பட்ட தீபாவளி மலர்