பிரோபஸ் கிளப் ஆப் சென்னை. (பக்கம்: 275). முதியோர்களின் நல நாளாகக் கொண்டாடப்படும் அக்டோபர் முதல் தேதியை ஒட்டி சென்னையில் உள்ள புரோபஸ் கிளப் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தலைவி டாக்டர் பாலாம்பாள். சமுதாயத்திற்கு "சீனியர் சிட்டிசன்' தொண்டாற்றவும், குடும்பத்துடன் இணக்கமாக நோயின்றி வாழவும் வழிகாட்டுகிறது இந்த அமைப்பின் பணி. இந்த வெளியீட்டில் மிக அரிய தகவல்கள் உள்ளன. டாக்டர் பாலாம்பாள் எழுதிய "பல்லாங்குழி' அதில் ஒன்று. அதேபோல தலைசிறந்த நிர்வாகிகளுள் ஒருவரான ஜி.வி.ராமகிருஷ்ணா தனது பணிக்கால நினைவுகளை சுருக்கமாக எழுதியுள்ளார். இத்தாலிய கம்பெனி ஒன்று அளித்த கமிஷøன், டெண்டர் தொகையில் இருந்து கழித்து அரசுக்கு செலவைக் குறைத்த அவரது நேர்மை, இன்றைய நிர்வாகிகளுக்கு (பக்.125), வழிகாட்டுதலாகும். அறிவுத் திறன் வீழ்ச்சி, செயற்கைப் பற்கள் கட்டுவது, நகரில் உள்ள முதியோர் இல்லங்கள், உடல் நலன் பற்றிய கேள்வி பதில் என்று அழகான ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அச்சமைப்பும் நேர்த்தி.