ஸ்ரீநேமிநாதர் பதிப்பகம், திருமலை (ஆரணி) 607 907. விற்பனை உரிமை: ரிஷப் மற்றும் பிரதிபா 71 (32) லோகோஸ்கீம் 2வது தெரு, ஜவஹர் நகர், சென்னை-82. (பக்கம்:194)
ஜைன தத்துவம் பரந்து விரிந்தது. கேவலி பகவான் அருகப்பெருமானால் திவ்யத் தொனியாக வெளிப்பட்டது. பின்னர் கணதரர், ஆசாரியர் என்று பலராலும் விரித்துச் சொல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்களில் பல மொழிகளில் விளக்கமாக எழுதப்பட்டது. அத்தகைய விரிந்த தத்துவக்கடலை இக்காலக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு சிறு அறிமுகம் என, ஜைனத்தின் அடிப்படைத் தத்துவக் கருத்துகளை சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.ஜைனம் என்ற இந்நூல் ஆன்ம ஆராதனைக் கருவியாகத் திகழும் நூலாகும்.ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.