விஜயா பதிப்பகம், கோவை-641 001. (பக்கம்: 120).
இதிகாச புராணங்களால் செழித்த பூமி பாரத பூமி. பதினெண் புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் பெருமை வாய்ந்தது.
நம் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறுவது இப்புராணம்.இறைவனால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டது வியாசர் திருவாயால் அருளியதை தமிழில் ஆசிரியர் சுருக்கமாக 31 தலைப்புகளில் விளக்கி உள்ளார்.28 பாவ லோகங்களை (பக்.51) பட்டியலிடும் தலைப்பைப் படிக்கையில் பாவம் செய்யாது வைராக்கியத்தோடு வாழ, படிப்பவருக்கு ஊற்றம் பிறத்தலாம் எமலோக காட்சிகள் (பக்.89), உலகியல் நெறிகள் (பக்.98) , அகால மரணம் (பக்.106), பாவங்கள் சிரார்த்தங்கள் (பக்.113) போன்ற விஷயங்கள் நல்லவிதமாக வாழ தூண்டுதலை ஏற்படுத்தும். எளிய தமிழில் ரத்தினச் சுருக்கமாக வெளிவந்துள்ள இப்படைப்பு, இறப்பிற்கு பிறகு என்ன நிகழ்கிறது என்பதை விளக்கிக் காட்டுகிறது.