ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 116).
தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, பொது உடைமைக் கோட்பாட்டினால் அமைய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.
உலகின் பல நாட்டுத் தத்துவங்களையும் ஆராய்ந்து, இந்தியத் தத்துவத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தாங்கள் வாழ மற்றவர்களை ஒழிப்பது ஐரோப்பாவின் நோக்கம்; மற்றவர்களைத் தங்கள் நிலைக்கும். அதற்கு மேலாகவும் தூக்கி விடுவது பாரத நாட்டின் நோக்கம். ஐரோப்பாவில் எங்கும் பலசாலிக்கு வெற்றி! பலவீனனுக்கு சாவு. ஆனால், பாரத நாட்டில் ஒவ்வொரு சமூக நீதியும், எளியோரைக் காக்க ஏற்பட்டுள்ளது (பக்.5).
சுவாமி விவேகானந்தர், பிராமணர் என்பது ஜாதியல்ல, அது ஒரு உயர்ந்த நிலை என்றும், ஆரியர் என்பது நாம் அடைய வேண்டிய அரிய நிலை என்றும் விளக்குகிறார். ஜாதி இல்லாத நாடே இந்த உலகில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை ஜாதியில் இருந்து தான் ஜாதி இல்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்தத் தத்துவ அடிப்படை மீது தான் ஜாதியே அமைந்துள்ளது. மனித இனத்தில் லட்சியம் பிராமணன். எனவே, எல்லோரையும் பிராமணன் ஆக்குவதே இந்தியாவைப் பொறுத்தவரை செயல் திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால் இம்முயற்சி எப்போதும்621. மொழிபெயர்ப்புக்கலை: ஆசிரியர்: கா.பட்டாபிராமன், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-சி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 172, (டெம்மி) விலை: ரூ.60)
மொழிபெயர்ப்பு இன்று தனிக்கலையாக வளர்ந்து வருகிறது. பிற மொழிகளில் உள்ள அறிவுச் செல் வங்களைத் தமிழன்னைக்கு படைக் கவும், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகளைப் பிறமொழிகளில் உருவாக்கவும் மொழிபெயர்ப்புக்கலை உதவுகிறது.இந்த நூல் 8 இடங்களாக பிரிக்கப் பட்டு மொழிபெயர்ப்பின் வழிமுறைகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படவுள்ளன.
எடுத்துக்காட்டான மொழிபெயர்ப்புகளும் உண்டு. பின்னிணைப்பாக பயிற்சிகளும் உண்டு. உங்கள் மொழிபெயர்ப்பு திறமையை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும் நூல். தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் இந்நூலைப் பாட நூலாக, பார்வை நூலாக வைத்துள்ளதே இதன் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.