சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 176).
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள், குழப்பங்கள், சிக்கல்கள் இவற்றை மிக எளிய முறையில் தீர்வு காணும் வகையில் இரண்டிரண்டு பக்கங்களில் கட்டுரையாக உருவாக்கியுள்ளார் பிரபல எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்.
"என்னையே எல்லோரும் கவனிக்க வேண்டுமென ஏங்குகிறேன்?,' "ஏன் எப்பொழுதும் "டிவி' பார்க்கிறேன்?,' "ஏன் எந்தப் பொறுப்பு தந்தாலும் தட்டிக் கழிக்கிறேன்?,' "ஏன் சில பேரைக் கண்டால் எரிச்சல் அடைகிறேன்?,' "ஏன் எப்போது பார்த்தாலும் சோம்பேறியாக இருக்கிறேன்?,' இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பேராசிரியராக இருந்து பதிலளிக்கிறார் நூலாசிரியர்.
"இன்ஸ்டண்ட் அனாலிஸிஸ்' என்ற ஆங்கில நூலின் கருத்துக்களை உள்வாங்கி தமது சொந்த நடையில் மிக நளினமாக படைத்துள்ளார் ரா.கி.ர., அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அன்றாடம் எழும் பிரச்னைகளை தன் எழுத்துக்களால் தீர்வு கண்டு முன்னேற்றப் பாதை நோக்கி, திருத்தி, திருப்பிவிடும் வல்லமை இந்நூலாசிரியருக்கு உள்ளது. மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் நிறைந்த நூல்.