AN EASY GUIDE TO ENGLISH GRAMMAR(ஆங்கில இலக்கண நூல் - வால்யூம்-2):நூலாசிரியர்: லயன் பி.அப்புராஜ். வெளியீடு: தன்மதி பதிப்பகம், டி-2/6, ராம்கோ ஸ்டாப் குவார்ட்டர்ஸ், வின்டர்பெட், அரக்கோணம்-631 005. (பக்கம்: 200).
ஆங்கில மொழியைத் தவறில்லாமல் பேசவும் எழுதவும் அம்மொழியின் இலக்கணம் அறிதல் இன்றியமையாததாகும். இந்நூல் மிக எளிய முறையில் தமிழ் மொழிவாயிலாக, ஆங்கில இலக்கணத்தைக் கூறுகிறது.மரபுச் சொற்கள், மரபு வழக்கு என்பதை இடியம்ஸ் அண்டு ப்ரேஸஸ் என்று விளக்கி, இரண்டுக்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாட்டையும் ஆசிரியர் விளக்குவது மிக அருமை (பக்.77).மொத்தம் 27 தலைப்புகளில் இந்நூல் ஆங்கில மொழியின் இலக்கணத்தைக் கூறுகிறது.பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் மிகவும் உதவும் நூல் இது.