ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 2848 5943. (பக்கம்: 184. விலை: ரூ.60).
தாய் பாலூட்டுவாள்; சோறூட்டுவாள்; அத்துடன் நல்லொழுக்கம், நற்பண்பு, நல்லன்பு, நல்லறிவு, நல்லாற்றல், (த)நன்னம்பிக்கை எல்லாவற்றையும் அல்லவோ ஊட்டுவாள். சிற்பியின் உளி - கவனம், பெற்றோரின் சொற்கள் - அக்கறை. மறுக்க முடியுமோ!"தன்னம்பிக்கை வளர்த்த தாய்' என்று நான்சி - எடிசன் (பக்.112) பட்டினத்தார்(பக்.14), பகத்சிங் (பக்.49), ரமணர் (பக்.51), கர்ணன் - குந்தி (பக்.58-79), அப்துல் கலாம் (பக்.12), காமராஜர் (பக்.88), வில்பிரட் கிபனின் கற்பனைத் தாய் (பக்.94), அபிமன்யு (பக்.184), தாயன்பினால் "கண்ணா கண்ணா' என அழைத்தபடி மூர்ச்சித்து உயிர் துறந்த பிரேமாபாய்(பக்.172), உ.வே.சா., (பக்.175) என்று 26 தலைப்புகளில் தாயன்பிற்கு பேராசிரியை தமிழில் அர்ச்சனை செய்துள்ளார்.முதல் ஏழு தலைப்புகள் தாய் - தனயருக்கு உள்ள இன்றைய படபிடிப்பு. நல்ல தமிழில் நனைகிறோம்! நம் தாயின் நினைவில் கரைகிறோம். அன்னையர் தினம் கொண்டாடுபவருக்கு நன்கொடையளிக்க நல்ல நூல்.