பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் மூன்று தொகுதிகள், விலை ரூ. 4000. ( ஒவ்வொரு பகுதியும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்டது) கிடைக்குமிடம்: விகடன் பிரசுரம், சென்னை -600 006.
இது அறிவு சார் தேடல் காலம். இத்தேடலை ஊக்குவிக்க எடுத்த பிரமாண்ட முயற்சி அழகிய படைப்பாக உருவெடுத்திருக்கிறது. மொத்தம் 28 ஆயிரம் தலைப்புகளில் தகவல் கட்டுரைகள் ,அதிலும் ஒவ்வொரு தகவலும் 50 முதல் 1000 வார்த்தைகள் வரை கொண்டவை, 1800 புகைப்படங்கள், 150 வரைபடங்கள், 35 அட்டவணைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்த தகவல் களஞ்சியம்.என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா மொத்தம் 4.4 கோடி வார்த்தைகள் கொண்டது. ஆங்கில மொழியில் தொடர்ந்து பதிப்பிக்கப்படும் 32 தொகுதி கொண்டதை இங்கே மூன்று தொகுதிகளில் சுவைக்கலாம். தகவல் சார்ந்த கேள்விகள் , சந்தேகங்கள், எல்லாவற்றுக்கும் இந்த மூன்று தொகுதிகளும் துல்லியமாகப் பதில் சொல்லும் என்று நம்புவதாக பதிப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்தது முற்றிலும் சரியானது. அகர வரிசையில், உச்சரிப்புக் குறிப்பு, எழுத்துக்கள் மற்றும் ஒலிக்குறிப்புகள், பெயர் விளக்கம் என்று வார்த்தைகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. தவிரவும் "ஒளவையார்' என்பதைப் படிக்க சிரமமாயிருக்கும் என்பதால் "அவ்வையார்' என்றிருப்பதையும் சுட்டிக்காட்டி மாற்றத்தைத் தெரிவித்ததற்கு பாராட்டுதல்கள். இத்தகவல் களஞ்சியத்தைத் தொகுத்த பதிப்பாசிரியர் டாக்டர். சுதா சேஷய்யன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முயற்சி அசாதாரணமானது.முதல் பகுதியில், அச்சுறுத்தல் ,அச்சுறுத்திப் பயமுறுத்தல் இந்த இருவார்த்தைகள் பக்.19ல் உள்ளன. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியோ, அன்றி அச்சுறுத்தியோ சட்டத்திற்கு புறம்பாக பணம் சொத்து முதலியவற்றைப் பறித்தல்... என்ற விளக்கம்,அதிலும் "மிரட்டல்' அல்லது "அச்சுறுத்தல்' என்னும் தனிப்பிரிவாக , தனிப்பட்ட சட்ட நடவடிக்கைக்காக சில சமயங்களில் பிரித்துப் பரிசீலிக்கப்படும். அதிலும் சிறப்பாக மேலும் காண்க : கையூட்டு என்றிருப்பது இந்த மூன்றின் தொடர்பை நமக்கு நினைக்க வைக்கிறது.முதல் தொகுதியில் "அ" முதல் "ங' வரை அடங்கும். இதில் பக்கம் 617ல் கடல்பசு, ஸ்டெல்லார் பற்றிய விளக்கத்தில் 24 அடி நீளம் கொண்டது. இதற்கு பற்கள் கிடையாது. முன்பு இந்த இனம் மொத்தம் 5000 இருந்தது என்றும் பின்பு 1768 வாக்கில் அடியோடு அழிக்கப்பட்டது இந்த இனம் என்பதும் தகவலாகும். மற்றொரு கடல்பசு அமேசான், ஆப்ரிக்காவிலும் வாழ்பவை. 700 கிலோ எடை கொண்டவை. இந்தப் பசுக்களின் அடிப்படையில் தான் கடற்கன்னித் கதைகள் தோன்றிய செய்தி படிக்கச் சுவையானது.தொகுதி இரண்டில் "ச' முதல் "ப' வரை உள்ள சொற்களின் தகவல் திரட்டாகும். இதில் பக்கம் 4ல் சங்கு பற்றிய விளக்கத்தில் உள்ள விளக்கம் இதோ: கடல் நத்தை. இதன் அகன்ற, புரிகள் கொண்ட முக்கோண ஓட்டின் வாய்ப்பகுதி தடித்து, உச்சியை நோக்கி நீண்டு இருக்கும். சங்கு நத்தைகள் (ஸ்டிராம்பிடே குடும்பம்) மிதவெப்ப நீரில் உள்ள தாவரத் துணுக்குகளை உணவாகக் கொள்கின்றன. பிளாரிடாவில் இருந்து பிரேசில் வரையிலான நீரில் ராணிச்சங்கு (ஸ்டிராம்போஸ் ஜிகாஸ்) என்ற இனம் காணப்படுகிறது. இதன் ஓடு பல்வேறு வண்ணங்களும் வடிவங்களும் கொண்டு அலங்காரமான தோற்றத்தில் காணப்படுகிறது.ஓட்டின் முதல்புரி அல்லது சுற்றில் இளஞ்சிவப்பு துவாரம் 12 அங்குல (30 செ.மீ.,) நீளம் கொண்டதாக இருக்கும். சிப்பிகளை உண்ணும் ஃபல்கர் சங்கு இனங்களில் (மெலான் ஜெனிடே குடும்பம்) நீரோடைச் சங்குகளும் (பிஸிகான் கனலி குலாடம்) மின்னல் சங்குகளும் (பி.கான்ட்ரேரியம்) அடங்கும். அமெரிக்க அட்லாண்டிக் கரையோரத்திலும் காணப்படும். இவை கிட்டத்தட்