வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! வெற்றிக்கு விரைந்திடு, விழித்திடு! வென்றிடு!: இந்த மூன்று நூல்களின் தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் ( ஒவ்வொரு நூலின் விலை ரூ.25) வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை-600 004
பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் வெளியிடப்படும் நூல்கள் கருத்துச் செறிவுடனும், எளிமையாகவும் இருக்கும் என்பது வழக்கம். இதில் வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே என்ற நூல், ஆசிரியர்கள் ஊக்கம் பெற <உருவான ஓர் அருமையான படைப்பாகும். இந்நூலில் "இந்த இரண்டும் இருந்தால் இனிய ஆசிரியர் தான்' என்ற கட்டுரை தெரிவிக்கும் கதை அதனால் பெறப்படும் முடிவு ஆசிரியர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும்.வெற்றிக்கு விரைந்திடு என்ற நூல், அனைவரையும் தொடர் வெற்றியாளராக்கும் நூல். உலகம் உதைக்கும் போது துள்ளியெழும் ஒட்டகச்சிவிங்கி குட்டி போல துள்ளியெழ வேண்டும் என்பது உட்பட பல தகவல்கள் கொண்ட கட்டுரைகள் அடங்கிய கருத்துப் புதையல்.விழித்திடு, வென்றிடு என்ற நூல் அனைவரையும் இனியவராக்கும். பணப்புழக்கம் இல்லாத காலத்தில் அன்னதான சிவம், எப்படி அனைவருக்கும் உணவளிப்பதைத் தனது கடமையாகக் கொண்டு வெற்றியுடன் செயல்பட்டார் என்பதை நினைக்கும் போது நெகிழ்ச்சியும், இனிமையும் தானாகவே வரும்.நல்லநூல்கள் தேடிப் போக விரும்புவோர்க்கு இவை குறைந்த விலையில் கிடைக்கும் பொக்கிஷம் .