18, வெங்கடேச அக்ரஹாரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்; 335. விலை: ரூ.75).
செல்வத் திருமகளை திடங்கொண்டு தினமும் தியானித்து வருபவர்களுக்கு எளிய தமிழில் பொருள் உணர்ந்து துதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நூல் இது.விஷ்ணு புராணத்தில் உள்ள ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ லட்சுமி தந்திரம் ஸ்ரீஸூக்தம், பூஸூக்தம், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் என ஒன்பது தலைப்புகளில் ஒவ்வொன்றின் விளக்கம், குறிப்புகள், பூர்வர்கள் அருளிய உரைகள், தொடர்புடைய கதைகள் என நயம்பட ஆத்திக பெருமக்களுக்கு இந்நூலை ஆசிரியர் காணிக்கையாக்கி உள்ளார்.கூறப்பட்டுள்ள விஷயங்களைத் தெளிவு பெற ஏழெட்டு ஆண்டுகளாவது காலட்சேபம் கேட்க வேண்டும். அப்படி கற்றுத் தெளிந்த விஷயங்களை பரந்த மனதுடன் ஏற்படுத்தி அளித்துள்ளது ஆசிரியப் பெருந்தகையின் கருணை என்றே கூற வேண்டும்.வெள்ளிக்கிழமை பூஜை, குபேர பூஜை, அட்சய திருதியை என பல பல நாட்கள் செல்வம் வளர பக்தர்கள் பூஜை புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, தெளிவையும் நல்லவிதமாக பூஜை செய்ய வேண்டிய முறைகளையும் இந்நூல் எடுத்தியம்பும்.ஆசிரியரின் இப்பெரும் பணிக்கு பாராட்டுக்கள்.