விமல் சொக்கநாதன், லண்டன். 727-பி, லண்டன் ரோடு, லண்டன். (பக்கம்: 184. விலை: ரூ.125).
இது ஒரு வித்தியாசமான நூல். இதில் வானொலி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள், செய்தி வாசிப்பு, துல்லிய மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம். நேர்முகம் காணல், வெளி ஒலிபரப்புக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் இசை நிகழ்ச்சித் தயாரிப்புகளின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.பல்வேறு அம்சங்கள் பற்றிச் சுருக்கமாக, ஆனால் விளக்கமாக எழுதியிருக்கிறார் இதன் ஆசிரியர். படிப்பதற்குச் சுவையான நூல்.