முகப்பு » இலக்கியம் » கல்லெழுத்தில்

கல்லெழுத்தில் காலச்சுவடுகள்

விலைரூ.100

ஆசிரியர் : கு.சுவாமிநாதன்

வெளியீடு: திருக்குறள் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்:224)

தலை எழுத்து வாழ்வை நிர்ணயிப்பது போலவே, கல் எழுத்தாகிய கல்வெட்டு வரலாற்றை நிர்ணயிக்கிறது. வடநாட்டு புத்தமதக் கொள்கையைப் பரப்ப மௌரிய மன்னர் அசோகர் பயன்படுத்திய பிராமி எழுத்து தமிழகத்திலும் வழக்கத்தில் இருந்தன. கி.மு.300 முதல் கி.பி.300 வரை இக்கல்வெட்டுக்கள் அரச்சலூர், மேலூர், ஆனைமலை, கீழ்வளைவு, திருப்பரங்குன்றம், திருவாதவூர், புகளூர் ஆகிய இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. சமண முனிவர்களே இதை அதிகம் கையாண்டுள்ளனர்.

முதன் முதலில் தமிழில் கல்வெட்டுக்களைப் பொறித்த பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மர். செங்கல் பட்டு மாவட்டம் வல்லம் குகையில் இவர் பொறித்ததே தமிழின் முதல் கல்வெட்டு (பக் 19) என்னும் இனிய செய்தி, படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கல்வெட்டு வரையும் முறையில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்தியவர் முதலாம் இராசராச சோழன், கிரந்த எழுத்துக்கள் பல்லவர் ஆட்சியில் கி.பி.800ல் இன்றைய நிலையைப் பெற்றுவிட்டன. முதன் முதலில், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையைக் கல்வெட்டில் பொறித்தவன் இரண்டாம் ராசேந்திர தேவன். இவன் காலத்தில் கி.பி.1069ல் திருவொற்றியூரில் ஆதிபுரீசுவரர் கோவிலில் ஆலயக் கல் வெட்டு விளக்குகிறது. மதுரை மீனாட்சி கோவிலிலும் திருவெம்பாவை ஓத நிவந்தங்கள் தந்ததை அந்த ஆலயக் கல்வெட்டு கூறுகிறது.

திருமுருகன் பூண்டி, திருக்கண்டியூர் ஊர்க் கல்வெட்டுகளும், கர்நாடகத்தில் உள்ள தமிழ்க்கல்வெட்டுச் செய்திகளும் பழங்காலத் தமிழகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. தமிழின் செல்வாக்கு கன்னட பூமியில் பரவிக்கிடந்ததை இந்த நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளது பாராட்டத்தக்க தமிழ்த் தொண்டாகும்.எழுத்துப் பிழைகளை முற்றிலுமாக நீக்கி, இன்னமும் சிறிது எளிமைப்படுத்தினால் பாமரரும் இந்நூலைப் படித்து, பண்டைய தமிழர் வரலாறு அறிந்து வியந்து போவர்.
இந்நூல் கல்வெட்டுத் துறைப் பயணத்தில் புதிய மைல்கல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us