(பக்கங்கள்: 334) சிறந்த இலக்கிய இதழான அமுதசுரபி, தனது 62 ஆண்டு கால இலக்கிய சேவையை துடிப்புடன் தொடர்கிறது என, அறிவிப்பு போல இந்த ஆண்டு தீபாவளி மலரை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
தற்கால இலக்கியம், சினிமா, இதழியல், இசை, அரசியல் என சிறப்பு தலைப்புகளுடன் அந்தந்த துறையைச் சார்ந்த அன்பர்களின் கட்டுரைகள் மலரை அலங்கரிக்கிறது. சமூகச் சிறுகதைகள், சரித்திர சிறுகதைகள், ஒருபக்க கதை, கவிதைகள், பொருளாதாரம், வாழ்வியல், தமிழியல், கைவினை என அனேக தலைப்புகளில் படித்து மகிழ, நிறைய விஷயங்களுடன் இந்த வருட தீபாவளி மலரை ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த படித்த முதல் நாவல், லா.ச.ரா. பற்றிய நா.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை, யோகிராம் சுரத்குமார் பற்றி ஜனகனின் கட்டுரை என, மலர் முழுவதும் சுவாரஸ்யமான கட்டுரைகள். கோபுலுவின் கைவண்ணத்தில் அட்டைப்படம், வேல் பெறும் முருகன் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அற்புதமான மலர்.