முகப்பு » கதைகள் » ஆன்மிக கதைகள்

ஆன்மிக கதைகள்

விலைரூ.55

ஆசிரியர் : தங்கம் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: 978-81-8476-113-9

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

வாழ்க்கைத் தத்துவங்களையும், ஒழுக்க நெறிகளையும் காட்டுபவை, இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்களில் பொதிந்துள்ள வாழ்க்கைக் கதைகள், புராணங்களில் கூறப்படும் நீதிக் கதைகள், மகான்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புத நிழ்வுகள் ஆகியவற்றை எளிமையான நடையில் தந்துள்ளார் நூலாசிரியர் தங்கம் கிருஷ்ணமூர்த்தி.
மஹாளயபட்ச அமாவாசை அன்று பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியம், அதனால் உண்டாகும் பலன் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. தெய்வீக மணம் கமழும் தமிழகத்தின் ஆன்மிகப் பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரியில் விரதமிருந்து தீபமேற்றி சிவனை வழிபட்டால் ஏற்படும் பலனை கயவன் வேதநிதியின் கதை உணர்த்துகிறது. எது புலனடக்கம் என்பதை விளக்க, பதஞ்சலி முனிவர் அவரது சிஷ்யரின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் கதை உள்ளது. ஞானச் செருக்கு கூடாது என்பதை உணர்த்த, விஜயேந்திர ஸ்வாமிகள் _ பிரபஞ்சன சர்மா போட்டி கதை உள்ளது. சந்நியாசி, சம்சாரி ஆகலாமாஒ என்ற விளக்கத்தைத் தருகிறது ஞானேஸ்வரின் சிறுவயது அரசவை விவாதம். விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஸ்ரீரங்கத்தின் எல்லை ராஜகுரு வியாசராஜரால் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்ற வரலாற்றோடு ஒன்றிய கதை, சிக்கல்களைத் தீர்க்கும் மதிநுட்பத்தின் அவசியத்தைப் புலப்படுத்துகிறது.
அதேபோல், சொர்க்கத்தை விடவும் சிறந்தது, அறச்செயல் புரிந்து வாழ்வதே என்ற பண்பை முத்கலர்&துர்வாசர் கதை காட்டுகிறது. குலம், மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்த தீர்க்கதரிசிகளான ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், அண்ணாமலை ஸ்வாமிகள், ஞானேஸ்வர் போன்றோரின் இறைச்சேவை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறுகிறது இந்த நூல்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள வேத, இதிகாச, புராண, ஆன்மிக கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரியவைக்கக் கூடியவை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us