விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
தமிழகத் திருத்தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த, நினைத்தாலே முக்தி தரும் தலம் _ திருவண்ணாமலை. இதன் சிறப்பு _ கிரிவலம் வருவது. இங்கே, மலையே சிவன் வடிவாகக் கருதப்படுவதால், மலையை வலம் வருதல், புண்ணியங்களைக் கூட்டுமாம்.
இந்த நூல் _ திருவண்ணாமலையின் முழுப் பரிமாணத்தையும் காட்டுகிறது. கிரிவலத்தின் விளக்கம், கிரிவலம் எங்கே துவங்க வேண்டும், என்னென்ன நாட்களில் கிரிவலம் வர வேண்டும், வலம் வர என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் போன்றவற்றை நூலாசிரியர் பா.சு.ரமணன் தெளிவாக விளக்கியுள்ளார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களைப் பற்றியும், யோகிகள், துறவிகளின் ஆசிரமங்கள், அவற்றின் சிறப்புகளையும், தரிசிக்க வேண்டிய சந்நிதிகளையும் அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
கிரிவலம் வந்த பின் தரிசிக்க வேண்டிய, ஆலயத்துள் உள்ள பிராகாரங்களைப் பற்றியும், அங்குள்ள சந்நிதிகள் மற்றும் கோஷ்ட தெய்வங்களைப் பற்றியும் வர்ணனைகளோடு விளக்கியுள்ளார்.
சித்தர்களும் யோகிகளும் துறவிகளும் வாழ்ந்த, இன்னமும் சூட்சுமமாக வாழ்வதாகக் கருதப்படும் அண்ணாமலையின் அருமை பெருமைகளையும், அற்புத நிகழ்வுகளையும் படம்பிடித்து காட்டும் விதம், நம்மை பக்திப் பரவச நிலைக்கே அழைத்துச் செல்லும்!