முகப்பு » ஆன்மிகம் » வினை தீர்க்கும்

வினை தீர்க்கும் விநாயகர்

விலைரூ.60

ஆசிரியர் : மு. கோபிசரபோஜி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: 978-81-8476-159-7

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால்
உந்தனுக்கு உண்டே உயர்வு.
திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் பலரும் கணபதியைக் கைதொழுகின்றனர்.
செந்தாமரைப் பூவில் வீற்றிருப்பவர்; அம்பு, அங்குசம், பாசம், வில் இவற்றைத் தாங்கிய நான்கு கரங்களைக் கொண்டவர்; சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்; ஓம்கார வடிவானவர்; முழுமுதற் கடவுள்; முன்வினை அழிப்பவர்... இப்படிப்பட்ட விநாயகப் பெருமானைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு இந்நூல் ஒரு வரப் பிரசாதம்.
விநாயகரின் அவதாரக் கதை முதல், அவரின் திருவிளையாடல் கதைகள் வரை பலவற்றையும் முழுதாக அறிந்துகொள்ள இந்நூல் துணைபுரியும். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விநாயகரை ஏன் முதலில் வணங்குகிறார்கள்; விநாயகரின் வலது தந்தம் உடைந்து காணப்படுவதன் காரணம் என்ன; நாம் முழுமுதற் கடவுள் என்று விநாயகரை அழைப்பது ஏன்; அவருடைய வாகனமாக எலி எப்படி அமைந்தது; அண்ட சராசரங்களும் விநாயகரின் வயிற்றுக்குள் அடக்கம் என்பது எப்படி; விநாயகர் பிரம்மசாரி என்றால் சித்தி&புத்தி சமேத விநாயகர் என்கிறார்களே எப்படி? _ இவை போன்ற ருசிகரத் தகவல்களை, அனைவரும் ரசித்துப் படிக்கும் வண்ணம் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மு.கோபி சரபோஜி.
விநாயகர் என்றாலே இன்று பரவலாகப் பரவியுள்ள சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி விழாக்கள்தான் நம் நினைவுக்கு வரும். இந்த விழாக்கள் எப்படி வந்தன; சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி என்பது எப்படி அமைந்தது போன்ற தகவல்கள் மற்றும் சதுர்த்தி விரதக் கதைகள் ஆகியவை, படிப்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்.
அயல்நாடுகளில் பரவியுள்ள விநாயகர் வழிபாடு குறித்த தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விநாயகர் வழிபாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் இந்தத் தொகுப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us