விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வேர் ஆர் யூ கோயிங்?
இங்க பக்கத்துலதான் கடைக்கு.
வாட் ஃபார்?
கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான்
ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்பவர், தமிழில் இவர் சொல்லும் பதிலையும், தமிழிலேயே பதில் சொல்பவர் அவர் பேசும் ஆங்கிலத்தையும் புரிந்துகொள்கிறார். இப்படி ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தும், எளிய ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட பலரும் தயங்குவதற்கு என்ன காரணம்? அச்சம்தான். அந்த அச்சத்தைப் போக்கி, ஆங்கிலத்தில் உரையாட உளபூர்வமாகத் தயாராக்குகிறது இந்நூல்.
நம்மில் பலருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்; எதிராளி பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஆனால் பதில் சொல்ல ஒரு கூச்சம், தயக்கம், எல்லாவற்றுக்கும் மேலாக அச்சம் என்று ஆங்கிலம் பேசாததற்கு இந்த நூலாசிரியர் காரணங்களை அடுக்குகிறார்.
நம்மில் ஆங்கிலம் பேச வராத பலரும், அதற்கு தம்முடைய அச்சமே காரணம் என்று அறிவதில்லை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் ஆங்கிலம் பேசுவதை பலரும் தவிர்த்து வருவதை விளக்குவதுடன், தாழ்வு மனப்பான்மை, கூச்சம், அச்சம் ஆகிய குறைகளை மாற்றிக்கொள்ளும் பயிற்சி, பிறகு சுலபமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.
இந்த நூலின் இறுதி அத்தியாயங்களில், பேசுவதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு ஆங்கில அறிவு மட்டும் தேவையோ அந்த அளவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்தால், வாசகர்கள் அச்சமின்றி உடனே ஆங்கிலம் பேசத்தொடங்கலாம்.
ஆர் யூ ரெடி?