விலைரூ.50
புத்தகங்கள்
எனது கிராமம் எனது மண்
விலைரூ.50
ஆசிரியர் : அண்ணா ஹஜாரே
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-89936-92-1
Rating
அரசுகள், நகர வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி எனக் கருதுகின்றன. அதனால் கிராமங்கள் கைவிடப்பட்ட சவலைப் பிள்ளையாகி வாடுகின்றன. கிராம வளர்ச்சி என்பதுகூட கட்டடங்கள், சாலைகள், மின்கம்பங்கள் என்ற குறுகிய மனப்பாங்குடன் முடிந்துபோகிறது. மக்களின் வளமான வாழ்வே வளர்ச்சி என்றார் காந்திஜி. ஒவ்வொரு மனிதனையும் உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியே தவிர, வானளாவிய கட்டடங்கள் எழுப்புவது வளர்ச்சியாகாது.
இன்றைக்கு ஏதாவது வளர்ச்சித் திட்டம் என்றாலோ, கட்டுமானப் பணி என்றாலோ, தர்மப் பிரபுக்களையோ தொழிலதிபர்களையோ அமெரிக்க நன்கொடையையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் இவை எவற்றையும் எதிர்பார்க்காமல் சொந்த உழைப்பில் ஒரு கிராமம் முன்னேற முடியும் என்ற அனுபவத்தின் வடிவம்தான் ராளேகண் சித்தி கிராமம். இந்த கிராமத்தை உயர்த்தியதன் மூலம், மகாத்மாவின் கொள்கைகளான சுய சார்பு, சுய நிறைவு, சுய ஆதிக்கம், சுய ராஜ்ஜியம் இவைதான் இனி வருங்காலத்தில் இந்தியாவின் கிராமங்களில் செயல்படுத்தப்படவேண்டும்; இதைச் செயலாற்றாத வரையில் இந்தியாவின் விடிவெள்ளியைக் காணமுடியாது என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் அண்ணா ஹஜாரே.
அழகற்று, ஆதரவற்றுக் கிடந்த கிராமத்தை, தன்னுடைய அயராத சிந்தனை மற்றும் உழைப்பின் மூலம், மற்ற மாநில மக்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மாற்றியது பற்றிய அனுபவங்களை இந்நூலில் தெரிவித்துள்ளார். தன் கிராமத்தை எப்படியெல்லாம் நல்வழிக்குக் கொண்டுவர முயன்றார்; அப்போது ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அவர் எப்படி முறியடித்தார்; எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார் என்பதை, அண்ணா ஹஜாரேயின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்நூலை எளிய தமிழில் தொகுத்துத் தந்துள்ள டாக்டர் வி.ஜீவானந்தம், அண்ணா ஹஜாரேயை தமிழ் வாசக உள்ளங்களில் பதிய வைக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளார்.
இப்புத்தகத்தை வாங்கிப் புரட்டும் ஒவ்வொரு விரல்களும் எதிர்காலத்தில் வலுவான சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுக்கும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!