முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ மத்வரும்

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்

விலைரூ.55

ஆசிரியர் : பரணீதரன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: 978-81-8476-058-3

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை உணர்வைப் புகட்டி, பக்தி மேலோங்கச் செய்தவர்கள்.
இந்த மகான்களின் பாதம் பட்ட பூமியில் பயணிக்கவும், அவர்கள் பிறந்த மண்ணுக்குச் சென்றும், அவர்கள் நிறுவிய கோயில்களை தரிசித்தும் புண்ணியம் பெற நினைத்தாலும் அனைவருக்கும் இந்தப் பேறு கிட்டிவிடுவதில்லை. மகான்களின் வரலாறு தொடர்பான நூல்கள் அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்குகின்றன. பரணீதரன் எழுதிய ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் என்ற இந்தப் பயண நூலும் அத்தகைய ஒன்றுதான்!
ஸ்ரீ மத்வர் வாழ்ந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர் பயணித்த கோயில்களுக்கெல்லாம் நாமும் செல்கிறோம். தரிசித்த தெய்வங்களை வணங்குகிறோம். ஸ்ரீ மத்வர் அவதரித்த பாஜக க்ஷேத்திரத்துக்குச் செல்கிறோம். மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களை தரிசிக்கிறோம். பயணத்தின் முத்தாய்ப்பாக, ஸ்ரீ மத்வர் தோற்றுவித்த, ஒரே இடத்தில் இருக்கும் துவைத ஆசார்யர்களது நவ பிருந்தாவனத்தை வலம் வருகிறோம்.
ஓவியர் ஜெ.பி. இந்த நூலுக்கென்றே வரைந்து கொடுத்த துல்லியமான ஓவியங்கள் கண்களுக்கு விருந்து. ஓவியர் மாருதி அட்டைப் படத்துக்கென்று வரைந்து கொடுத்த ஸ்ரீ மத்வரின் திருவுருவம் கண்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us