சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்:336).
தென் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவே "சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி மலை அமைந்துள்ளது. சுயம்பு லிங்கங்களாக இங்கு சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் தானே எழுந்துள்ளனர். அகத்தியர் முதலாக 18 சித்தர்கள் இங்கு வந்து வழிபட்டு காயகல்ப மூலிகைகளைத் தந்துள்ளனர். இங்குள்ள புண்ணிய கங்கை ஊற்றுக் கிணற்று நீர் மிகவும் புனிதம் மிக்கதாகக் கூறப்படுகிறது.
எல்லா நோயையும் போக்கிவிட, அனுமன் கொண்டு வந்து வைத்த சஞ்சீவி மலை என்பதால், இங்கு வந்து வழிபட்டவருக்கு நோய்கள் தீர்ந்து விடுகின்றன. அங்குள்ள மூலிகைக் காற்றாலும், சதுரகிரி சிவனின் அருளாலும் பூரண நலம் பெற்றுத் திரும்பியவர்களின், வாழ்க்கைத் திருப்பங்கள் இந்த நூலைப் படிப்பவருக்கும் ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சித்தர்களின் பயணத்தை வாசகர்களுக்கும் உணர்த்தும் சிவநூல் இது.