விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம(!)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்! ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும்.
சிவராம், கோமதி, பிரசாத் மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள்!
இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண்!) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ்!
இந்த அட்வென்ச்சர் நாடகங்கள், ஆனந்த விகடனில் முன்பு தொடராக வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்போது மீண்டும் அவற்றைப் படிப்பவர்களும், இப்போதுதான் முதன் முறையாகப் படிப்பவர்களும் கவலைகளை மறந்து நிச்சயம் சிரிப்பார்கள்.