இக் கவிதைகள் வாழ்வது உணர்வகளின், காட்சி அனுபவங்களின், தியானங்களின் தளத்தில், அவற்றில் புதிய பரிமாணங்களில், புதிய அர்த்தங்களில் நமக்கு நாம் பார்த்த காட்சிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். கவிதை அனுபவங்களை மாத்திரமே சொல்கிறது. படிமம், புதிய சொல்லாட்சி, வர்ணனை என்பது போன்ற அலங்காரங்கள் ஏதுமற்று இக் கவிதைகள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. மின்னல் வெட்டுத் தெறிப்புக்கு என்ன அலங்காரம் தேவை?