கங்கை புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:220)
மகாகவி பாரதியார் படைத்தளித்த பாஞ்சாலி சபதம் தமிழர் நெஞ்சம் நிறைந்த குறுங்காப்பியம். மகாபாரதத்தின் ஒரு பகுதியாக தருமர் - துரியோதனன் சூதாட்டம் தொடங்கிப் பாஞ்சாலி இறுதியில் நெருப்பு மங்கையாக நின்று சூளுரைத்தல் (சபதம் செய்தல்) முடிய உள்ள இக்கதை எல்லாரும் அறிந்ததே. "ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான். சீச்... சீறியர், செய்கை செய்தான் என்பதும் "தருமத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்பதும் "ஓம் தேவி பராசக்தி ஆணை என்று தொடங்கிப் பாஞ்சாலி உரைத்த மொழிகளும் பலரும் அடிக்கடி மேடைகளில் சொல்லி மகிழ்வன. அன்னியர் ஆதிக்கத்தில் கட்டுண்ட பாரத தேவியை, திரவுபதியாக உருவகம் செய்து பாடிய, பாஞ்சாலி சபதம் நூல், உரை ஏதுமின்றியே எவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே.