ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17. (பக்கம்:152, விலை)
வல்லரசு நாடுகளில் முதலிடம் பெற்றது அமெரிக்கா. இந்நாட்டின் அதிபருக்கு உலகளாவிய அங்கீகாரம். முதன் முதலாக வெள்ளையரை நிர்வகிக்க நிறம் வேறுபட்ட ஒருவர் அதிபராகி உள்ளார். எல்லா நாடுகளும் சுட்டிக்காட்டும் வண்ணம் உலக வரலாற்றில் ஒரு புரட்சி. ஒபாமாவின் தோற்றம், வளர்ச்சி, அரசியலில் பங்கு, ஆட்சியை கைப்பற்றிய விதம், கொள்கைகள், இவரைப் பற்றிய மற்றவரின் கருத்துக்கள் என்பனவற்றை 18 கட்டுரைகளாக ஆசிரியர் இந்நூலில் வழங்கி உள்ளார். நியூயார்க் சிடி கல்லூரியில் தொடங்கிய மாணவப் போராட்டம் (பக். 27), ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேகரித்த சட்ட அறிவு(பக். 29), உண்மையான கையெழுத்து வேட்டை (பக். 39), ஜன., 2009ல் அதிபராக பொறுப்பேற்ற (பக். 70) என்று விறுவிறுப்பாக ஒபாமாவின் வாழ்க்கையையும், கொள்கையையும் அழகாக ஆசிரியர் வெளியிட்டுள்ளார். நிறம் முன்னேற்றத்திற்குத் தடையல்ல என்பது நூலில் தெள்ளத் தெளிவாகிறது.