பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம்
பெருவாரியான மக்களைச் சென்றடைந்து, அவர்களில் பெரும்பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தை இன்று அபகரித்துக் கொண்டிருக்கும் ஊடகம் தொலைக்காட்சி, பண்பாட்டுத் தயாரிப்புக் களங்களின் மேல் ஒவ்வொரு நாளும் இறுகிக் கொண்டு வரும் தொலைக் காட்சியின், இதழியலின் பிடியைப் பற்றிப் பேசுவதும், சுதந்திரமாக அறிவை வளர்க்கும் முயற்சிகள் மீதும் உலக விஷயங்களைப் பற்றித் தெளிவாக இருக்கும் குடிமக்களை உருவாக்குவதன் மீதும் இந்தப் பிடி அழுந்துவதால் ஏற்படும் அபாயங்களைப் பற்றிப் பேசுவதும் இப்புத்தகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பியர் பூர்தியுவின் புத்தகங்கள் இதுவரையில் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்திய மொழி ஒன்றில் இவரடைய புத்தகம் மொழி பெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை.