சாதாரண மனிதர்களின் வாழ்வில் நவீன மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் இமையத்தின் முந்தைய படைப்புகளை விட மிக வெளிப்படையாக இந்தச் சிறுகதைகளி்ல் வெளிப்பட்டுள்ளன. உறவு, பண்பாடு, விவசாயம், மனிதநேயம் என்று அனைத்தையும் சிதைத்துப் போட்டிருக்கும் நவீன வாழ்வின் அவலத்தை இமையம் தனக்கே உரிய மொழியில் கலையாக ஆக்கியிருக்கிறார். மனிதர்களின் புலம்பல்கள், வசைகள் வழியே அவர்களது வாழ்வின் துயரத்தைச் சட்டென்று காட்டிவிட்டுச் செல்வது இமையத்துக்கு மிக இயல்பாகப் பல கதைகளில் கூடியிருக்கிறது. பதினோரு கதைகளைக் கொண்ட இந்நூல் இமையத்தின் இரண்டாவது சிறுக்தைத் தொகுப்பு