பாரதி புக் ஹவுஸ், டி-28, மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை - 625 001. பக்கம்-116
கூடல் நகராம் மாமதுரையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவில், கலைச் சிறப்பும், சமயச் சிறப்பும் ஒரு சேரப் பெற்ற கோவில் நமது தொன்மையான வரலாற்றுச் சீர்மையை அறிந்து கொள்ள, மக்களின் பக்தி சிறுப்புத் தன்மையை தெரிந்து கொள்ள, மதுரையைச் சுற்றியுள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்கள், சம்பிரதாயச் சடங்குகள் பற்றிய விவரங்கள் நமக்குத் தேவை. இவை அனைத்தையும் இந்தச் சிறிய நூலில் அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். இவர் காவல் துறையில் பணி புரிந்து கொண்டே, தனது கல்வித் தகுதியை, முனைவர் பட்டம் வரை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.சைவ சமயச் சிந்தனையும், கல்வெட்டுத் துறையில், ஆழ்ந்த ஈடுபாடும் உள்ள நூலாசிரியரின் இந்த நூல் ஒரு நல்ல ஆய்வுக் கோவை.