நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:160)
தம்பலா, தோட்டி இன மக்களின் தலைவனாகப் புதுவையில் வாழ்ந்தவன். பிரெஞ்சுக்காரர்கள் சிலர் ஆணவத்துடன் இவ்வின மக்களை இழிவாகப் பேசியதால், நகரசுத்தித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைத்துப் புரட்சி செய்த மாவீரன்.மகாகவி பாரதி புதுவையில் வாழ்ந்த காலம் அது. பாரதி இந்த மாவீரனைச் சேரிப் பகுதியில் சென்று சந்தித்து உரையாடியிருக்கிறார். பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம், இந்தச் சந்திப்பின் போது உடனிருந்திருக்கிறார். அவர் எழுதிய குறிப்பு ஒன்றை ஆதாரமாக வைத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இச்சிறுகதையை எழுதியிருக்கிறார். இக்கதை தொடர்பான எதிர் விவாதங்களும், அவற்றுக்கான பாரதி வசந்தனின் விளக்கங்களும் நூலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.