ஆர்.எஸ்.நாராயணன், அம்பாத்துறை , திண்டுக்கல் - 624 302 போன்: 0451-2452365 மொபைல்: 94421 13588,
இந்தியாவில் ஆன்மிகம் மட்டும் அல்ல, மருத்துவம், விஞ்ஞானத்தில் காலம் காலமாக போற்றப் பட்ட பல தகவல்கள் உள்ளன. அது இன் றைக்கும் பொருந்துகிறது என்பது தான் சிறப்பம்சம்.
பண்டித நேரு தன் "டிஸ்கவரி ஆப் இந்தியாவில் சுஷ்ருதர் குடலில் ஆபரேஷன் செய்ய தலைமயிரிலும் நுண்ணிய கருவியை பயன்படுத்தியிருக்கிறார் என்று எழுதி நம் நாகரித்தை விளக்கியிருக்கிறார்.
ஆனால் இயற்கை வேளாண்மை பற்றி பேச்சு அதிகமாக எழும் போது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேளாண் அறிஞரின் இந்த சம்ஸ்கிருத சுலோகங்களின் மொழியாக்கம் இந்தியாவின் மதிநுட்பத்தைக் காட்டுகிறது. எலுமிச்சை மரம் காய்க்க நாயின் மாமிசத்தை உரமாக இடலாம் (பக்கம் 36), கிணறு தோண்டும் போது நீல நிற மண் வந்தால் இனிப்பு நீர், வெண்மை மண் எனில், உப்பு நீர் (பக்.59) "பஞ்ச கவ்யம் எனும் அமுதக்கரைசல் நுண்ணுயிர்ப் பெருக்கம், தாவரத்தின் வளர்ச்சிக்கான கொழுப்பைத் தரும் என்று பல தகவல்கள் உள்ளன. இந்த நூலை வேளாண்மைத் துறை பரிசீலித்து அதன்படி இயற்கை உரங்களை தயாரிக்கலாம் அல்லது விவசாயிகளுக்கு எளிமையாக சொல்லித் தரலாம். ஆசிரியர் இயற்கை விஞ்ஞானி என்பதால், தெளிவாகக் கருத்தைச் சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.