தலித் சமுதாயம் எவ்விதம் ஒடுக்கப்பட்டது என்பதைப் படம் பிடிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தலைப்பாக அமைந்த "குதிரில் உறங்கும் இருள் முற்றிலும் வித்தியாசமானது. அம்மாவுக்காக ஏன் மேகலை அழுதாள் என்பதை ஆசிரியர் விளக்குவதைப் பார்த்தால், "தன் கதைகளை யாரும் வெளியிட முன்வரவில்லை என்ற அவர் ஆதங்கம் புரிகிறது.
ஆனால் சமுதாயத்தில் வேதனையைச் சுமக்கும் அப்பாவிகள் இன்னமும் முன்னேற்றப் பாதையில் அதிக அடிகள் எடுத்து வைக்காததை இக்கதைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அடிமை இந்தியாவில் ஏற்பட்ட ரணங்கள் சுதந்திரம் ஆன பின்னும் இன்னமும் ஆறா வடு தான் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.