விலைரூ.955
புத்தகங்கள்
ஏ.ஆர்.பப்ளிகேசன்ஸ், 161, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை-625 020. (பக்கம்: 306)
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு சிறப்பு சேர்ப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இரண்டாயிரம் ஆண்டு வரலாற்று சிறப்பினை கொண்டிருக்கும் இக்கோவிலைப் பற்றி சரித்திர, புராண சான்றுகளுடன் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படியாக சொல்லியுள்ளார் ஆசிரியர். கோவிலில் உள்ள மண்டபங்கள், அவற்றின் பெயர் காரணம், சிற்பங்களின் வரலாறு, சுதைகளின் தோற்றம். நாயக்கர் சிற்பக்கலை, அவற்றின் தொன்மை, ஓவியங்கள் காட்டும் உண்மைகள், கோவிலின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளுக்கும் உள்ள வரலாறுகள் ஆகியவற்றை வியக்கத்தக்க வகையில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். தரம் வாய்ந்த தாளில் கண்களையும் மனதையும் ஈர்க்கும் வண்ணம், 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது நூலுக்கு கூடுதல் சிறப்பு. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைப்பற்றி எத்தனையோ புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இந்நூல் எழுத்துத்திறனாலும் புகைப்பட நேர்த்தியாலும் உயர்ந்து நிற்கிறது. நூலை படித்தால் மீனாட்சி கோவிலை ஒருநடை நேரில் சென்று நிதானமாக ரசித்து பார்க்க வேண்டும், என்ற உத்வேகம் எழுவது உறுதி. இதை ஏற்படுத்துவதே இந்நூலின் சிறப்பு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!