விலைரூ.80
புத்தகங்கள்
Rating
நவராத்திரிக்கு முன்னால் புரட்டாசி தேய்பிறை காலத்தில் வரும் 15 நாட்கள் மஹாளயம் என்றழைக்கப்படுகிறது. வள்ளுவர் வார்த்தையில் இது "தென் புலத்தார் என்றழைக்கப்படும். நமது மறைந்த முன்னோர்களுக்கு திதி தருவதற்கு சிறப்பான காலம்.மரணத்திற்கு பின் வாழ்வு என்ற அடிப்படையில் இந்து மக்கள் மட்டும், உயிர் பயணிக்கும் போது அது தங்கும் இடங்கள் பற்றி விரிவாக ஆய்ந்துள்ளனர். எப்படி உயிரானது வசுக்களாகவும், ஆதித்தர்களாகவும் நிற்கிறது என்பதை தற்போது பல ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன. இதை மேனாட்டவர்கள் வியக்கின்றனர். எமனுடன் வாக்குவாதம் செய்த நசிகேதன் தத்துவம் அதன் பிரமாண்ட பரிமாணமாகும். மறைந்த பெரியவர்களை நினைத்து அவர்களுக்கு திதி முதலிய சிறப்பு தர்ப்பண காரியங்களைச் செய்வது ஏன்? அதன் பலன்கள் என்ன என்பதை இந்த நூல் விளக்குகிறது. பல்வேறு திருக்குறளை ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. ஆனால் "மறப்பினும் ஓத்து கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பதையும் பதிவு செய்திருந்தால் (குறள் 134), இந்த நூலின் சிறப்பு அதிகரித்திருக்கும். இது எல்லா குலத்திற்கும் வள்ளுவர் கூறும் இலக்கணம். அதை <உணர்ந்த சமுதாயத்தினர் மகாளய அமாவாசை நாளன்று நதிகளில் திதி காரியங்களை செய்வது இன்றும் தொடர்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!