விலைரூ.100
புத்தகங்கள்
Rating
(பக்கம்: 328) இந்த ஆண்டும் வழக்கம்போல அமுதசுரபி தீபாவளி மலர் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளும், கண்களைக் கவரும் வண்ண ஓவியங்களும் மலரை அழகுபடுத்துகின்றன. தற்கால இலக்கியத்தின் முன்னோடிகள் என்ற பகுதியில் ஒன்பது பிரபல படைப்பாளிகள் குறித்து, ஒன்பது பிரபலங்கள் எழுதியிருக்கின்றனர். தி.ஜானகிராமன் பற்றி கே.வி.ராமநாதனும், முல்லை முத்தையா பற்றி விக்ரமனும், கவிஞர் கண்ணதாசன் பற்றி அவரது புதல்வர் காந்தி கண்ணதாசனும் எழுதியுள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒன்பது சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்.சுதா சேஷையன், குமரகுருபரனின் சகலகலாவல்லி மாலை குறித்து எழுதியிருக்கிறார். நல்லி குப்புசாமி "போர்த்துக்கீசியரும் கபாலீசுவரரும் என்ற தலைப்பில் இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வழங்கியிருக்கிறார். அரவிந்தர் குடியிருந்த வீடுகள் பற்றி அரவிந்த ஆசிரம சாதகர் என்.கே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை இதுவரை யாரும் தெரிவிக்காத கருத்துக்களைச் சொல்லுகின்றன. சினிமா, அறிவியல், பயணக் கட்டுரை என பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து பலரிடமிருந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்துள்ளனர். அருட்செல்வர் நா.மகாலிங்கம் "வள்ளலார் வழி, நகைச்சுவைப் பகுதிக்கு சிறப்பு சேர்த்துள்ள கே.எஸ்.ராகவன், பாக்கியம் ராமசுவாமி, ஏ.வி.கிரி ஆகியோரின் பங்கும் வாசகர்களின் கவனத்தை நிச்சயம் கவரும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!