விலைரூ.200
புத்தகங்கள்
சைவ சமயம் மிக மிகத் தொன்மையானது. தோத்திர சாத்திரங்களைக் கொண்ட சமயம். சைவ சமயத்தில்தான் சாத்திர நூல்கள் தனியாகக் தோன்றி மலர்ந்து வளர்ந்துள்ளன. சாத்திர நூல்களில் பாசம், ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பேசப்படுகின்றன.
வாழ்வியல், செயலை அடிப்படையாகக் கொண்டது. உடல், வாக்கு, மனம் இவைகளால் செயல்படுவதே வாழ்க்கை. கன்மம் என்றால் செயல், வினா என்பது தமிழ்ச் சொல். எல்லாச் செயல்களும் வினைகள் ஆகிவிடுவதில்லை. எந்த செயல்கள் வாக்கு, உடலையும் தாண்டி
மனதைப் பாதிக்கின்றதோ அவையே கன்மம் அல்லது வினையாகின்றன.
சித்தார்ந்த சைவத் தத்துவ ஞானம் அநாதி நித்தியமான பொருள்கள் மூன்று எனக் கூறுகின்றது. அவை இறைவன், <<உயிர், பாசம் என்பன. இவற்றுள் பாசம் என்னும் பொருள் ஆணவம், மாயை, கன்மம் என மூன்றாக உள்ளது. தத்துவ சாத்திரங்களில் கன்மத்தை விளக்குகின்ற போது, அரிதாக சில இடங்களில் உயிர் <உலகில் வாழும் நிலையில் நிகழ்வது கான்மியம் என்றும், முன்னைய நிலை மூலகன்மம் என்றும் கன்மம் என்றும் கூறப்படுகிறது.
மெய்கண்ட நூல்களில் கன்மம், சாத்திரங்களில் கன்மம், தமிழ் இலக்கண நூல்களில் கன்மம், ஆதி உற்பவமும் புணர் உற்பவமும், சொற்பொருள் விளக்கம், மூல கன்மத்தைப் பற்றிய சிவஞான முனிவர் முதல் சு.வச்சிரவேல் முதலியார் போன்றோர்களது ஆய்வுரைப் பதிவுகள், மூலகண்டம் பற்றிய இருவேறு சைவ சித்தாந்த ஆய்வாளர்களது விவாதப் பதிவுகள், யாழ் சைவப் பெரியோர்களது ஆய்வுக் குறிப்புகள் என, 11 தலைப்புகளில் ஆசிரியர் இந்நூலைத் தொகுத்துள்ளார். ஆன்மா அநாதியானது, ஆணவ மலத்தைப் பற்றியது மூல கன்மம். ஆணவ மலத்தைப் பற்றி அறியாமையாய் அழுத்தியதே மூல கன்மம். ஆன்மா ஆணவ மலத்தில் கிடப்பதை வெறுத்தும் சிவத்தை பெறுவதை விரும்பியதுமாகிய விருப்பு வெறுப்புகளே மூல கன்மம். ஆன்மா அநாதி கேவலத்தில் முதல்வனை மறந்ததே மூலகன்மம் என முத்தாய்ப்பாய் இந்நூலில் பல செய்திகளை ஆழமாய் பதிவு செய்துள்ளார் முனைவர் ர.வையாபுரியார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!