விலைரூ.110
புத்தகங்கள்
Rating
நியூசெஞ்சுரி புத்தக நிலையம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை-98. (பக்கம்: 226)
தொல்லியல் என்பது மனிதகுல வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதுவதற்கு தேவைப்படும் இன்றியமையாத அறிவியல் புலமாகும். தொல்லியல் துறையின் தோற்றம், வளர்ச்சி, அகழ்வாராய்ச்சி கொள்கைகளும், முறைகளும், பிற அறிவியல் தளங்களோடு கொண்டுள்ள உறவு, இந்திய தொல்லியலின் வரலாற்று ஆகியன இந்நூலில் இடம் பெற்றுள்ளன.இந்நூல் மதுரை காமராசர், மனோன்மணீயம் சுந்தரனார், அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்றவாறு அப்பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டுள்ளது. தொல்பொருளியல் விளக்கமும், நோக்கமும் தொடங்கி, நாணயவியல் முடிய 30 அரிய கட்டுரைகள் கொண்டது இது. தமிழர்கள் தங்கள் வசதிக்காகவும், ஓலைச்சுவடிகள் போன்றவை சேதமடையாமல் இருக்கவும், அழகிற்காகவும் எழுதும் எழுத்துக்களை வட்டெழுத்துகள் என்கிறோம். கி.பி., 5ம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்துகள் கையாளப்பட்டிருக்கலாம். இந்திய மன்னர்களின் பொருளாதார நிலை சிறிது குறைபட்ட போது செப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக பிற்கால குப்தர்கள் காலத்திலும், சோழர் காலத்திலும் அதிகளவில் செம்பினாலான நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படி தகவல்கள் பல இந்நூலிலிருந்து பெறலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!