விலைரூ.100
புத்தகங்கள்
Rating
எச்-1024, ஸ்ரீமீனாட்சி அபார்ட்மென்ட், எல்லீஸ் நகர், மதுரை-10. (பக்கம்: 336 ).
வடமொழியில் அம்பிகைக்கு "சவுந்தர்யலகரியை ஆதிசங்கரர் பாமகுடமாய் அணிவித்தார். தமிழில் அபிராமி பட்டர் என்னும் திருக்கடவூர் சுப்ரமண்ய பட்டர் "அபிராமிக்கு தமிழ்ப்பாவால் மகுடம் சூட்டினார். ஒரு பாடலின் முடிவே, அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும். அந்தாதியில் அமைந்த அபிராமி அந்தாதி பக்தி இலக்கியத்தின் மணிமுடியாகத் திகழ்கிறது. இந்த நூறு பாடல்களுக்கும் கி.வா.ஜ., போன்ற பலரும் பேருரை எழுதி வெளியிட்டுள்ளனர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆதாரமாக மேற்கோள்காட்டும் இந்த இரண்டாம் பாக உரை நூலும் மிக விரிவாக, பதவுரை, கருத்துரை, விளக்கவுரையுடன் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 25 பாடல்களின் விளக்கம் இந்நூல்."உடைத்தானை வஞ்சப் பிறவி என்னும் 27 ஆம் பாடலுக்கு விளக்கம் தரும்போது "பிறவி பற்றிய மிக விரிந்த ஆய்வு, பிறவிகள் போலவே மிக நீண்டதாய் வளர்கிறது. லலிதா சகஸ்ரநாமம், சிவஞான சித்தியார் நூல்கள் பிறவிக்கு விளக்கம் தருகின்றன. இந்த நூலாசிரியரின் ஆழ்ந்த புலமையும், பக்தியும், பன்மொழி அறிவும் படிப்போரை முதலில் வியப்பில் ஆழ்த்தும்! பிறகு அபிராமியின் பக்தியில் ஆழ்த்தும் முடிவில். நான்கு வரியில் அமைந்த ஒரு பாடலுக்கு, 14 பக்கங்களில் மிகப் பெரும் விளக்கம் எழுதியுள்ளது. ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பது போல் உள்ளது. திதியை மாற்றி நிலவை வரவழைத்த அபிராமி; அந்தாதி படிப்போரின் விதியையும் மாற்றி அருள் தருவாள் என்ற உண்மையை இந்நூல் மிக விரிவாகப் பேசுகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!