விலைரூ.70
முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்திராவின் கதை
புத்தகங்கள்
Rating
இரும்பு மனுஷி என பலராலும் அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையில் நடந்த பல அரிய சம்பவங்களை இந்நூலில் காண முடிகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பிரதமர் என்ற முறையில் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், தன் குடும்பத்தில், பெண் என்ற முறையில் அவர் ஆற்றியுள்ள கடமைகள் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். பெரும் செல்வந்தரான தாத்தா மோதிலால் நேருவின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதை கண்ணால் பார்த்த இந்திராவுக்கு, பின் நாளில் அக்காட்சிகள் அவரை எப்படி பக்குவப்பட வைத்தன என ஆசிரியர் அழகாக விவரித்துள்ளார்.
பிரதமர் என்ற பதவி வகித்த போதிலும், எல்லாரும் கூட்டுக் குடும்பமாக, சிறிய வீட்டிலேயே வசித்தால் போதும் என்ற அவரது சிக்கனம், இந்த காலத்து அரசியல் தலைவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் பேரன்கள் ராகுல் மற்றும் சஞ்சய் ஆகியோர் மீது அவருக்கு இருந்த அபரிமிதமான பாச உணர்வுகள், படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.
மொத்தத்தில், முன்னாள் பிரதமர் இந்திராவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
சி.எஸ்.,
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!