சைவ சித்தாந்தத்தின் ஆதார நூலாக தமிழில் விளங்குவது சிவஞானபோதம். இதன் வழிநூலாக சிவஞான சித்தியாரும், சார்பு நூலாக சிவப்பிரகாசமும் திகழ்கின்றன. சிவஞானபோதத்தின் ஒவ்வொரு சூத்திரப் பொருளையும், எடுத்துக்காட்டும் வெண்பாக்கள், உவமை
களோடு விளக்குகின்றன.
சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களுக்கான உவமைகளை மேற்கண்ட மூன்று நூல்களில் இருந்தும் திரட்டி, அட்டவணையாக தொகுத்து தந்துள்ளார் இந்நூலாசிரியர்.
சிவஞானபோத சூத்திரங்களை எங்ஙனம் கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது, சூத்திரங்களுக்கான எடுத்துக்காட்டு வெண்பாக்கள் எத்தனை, வழிநூல் செய்யுள்கள் மற்றும் சார்பு நூல் செய்யுள்கள் எத்தனை என்பதை முதல் அட்டவணையாக தந்துள்ளார். சைவ சித்தாந்தம் பயிலுவோர்க்கு இந்நூல், சிறந்த கையேடாக திகழும் என்பதில் ஐயமில்லை.