விலைரூ.50
புத்தகங்கள்
கண்ணதாசன் தலைமை திருக்குறள் கவியரங்கம்
விலைரூ.50
ஆசிரியர் : ஆர்.பி. சங்கரன்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: இலக்கியம்
Rating
எண்: 2, 3வது யூனிட், போட்ரூம், மாதவரம் பால் பண்ணை காலனி, சென்னை-51. (பக்கம்: 128 )
வள்ளுவன் வகுத்த நெறிப்பிரகாரம் அமைந்த குடும்பம்; வள்ளுவன் ஒரு தூய துறவி. பொருளியல், அரசியல் மேதை, வள்ளுவன் கண்ட குடியாட்சி போன்ற பொருட்களை, மூன்று தொகுதிகளில் உள்ளடக்கிய சிறு நூல் இது. கவிஞர்கள் உதிர்த்த ஒரு சில முத்துக்கள் இதோ."குழந்தைகளின் மழலை கூடாதென்றால், குழலிசையும், யாழிசை போல் மறைந்து போகும். உதைக்குங்கால் மகிழ்ச்சி தரும். நெஞ்சத்தின் மேல் உதைக் கொடுத்து முத்தத்தை பரிசாய் கொள்ளும் உச்சியினை மோந்ததுமே இன்பம் துள்ளும்!"அரசியலில் காண்பதெல்லாம் ஆரவாரம்; ஆள் வினையும் தொண்டுள்ளமும் அங்கே இல்லை; முரசம் என ஆர்ப்பரித்து முழங்குகின்றனர்; முன்னேற்றச் செயல்புரிய முனைவார் இல்லை!
கவியரசு ஆசிரியர் பொறுப்பு வகித்து நடத்தி வந்த, "தென்றல் இதழில் பதிவான கவிதைகளை எடுத்தாண்ட தொகுப்பாசிரியர், கண்ணதாசனது தலைமை உரைகள், இடைச் செருகல்கள் மற்றும் இணைப்புரைகளையும் சேர்த்து வழங்கியிருப்பின், இந்த கவிதை பூங்கொத்தின் மகரந்தம் இரட்டிப்பு மகிழ்வூட்டியிருக்குமே?
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!