தலையாய பீடமான சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் அருளுரையுடன் ஆரம்பமாகிறது இந்த ஆண்டு தீபாவளி மலர். பகவானுடைய கிருபைக்கு பாத்திரமானவர்களாகட்டும் என வாசகர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் ஸ்ரீ ஆசார்யார் சுவாமிகள். சுவாமி கமலாத்மானந்தர், தவத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். "யாக்ஞவல்கியரும் காயத்ரியும் சரஸ்வதியும் என்ற சுப்ரமண்ய சிவாச்சார்யாரின் கட்டுரையை படிக்கையில், "ப்ரிவி கவுன்சில் யாக்ஞவல்கியஸ் மிருதிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் நம்மை அதிசயிக்க வைக்கிறது. "மெட்டாபிசிக்ஸ் எனப்படும் நுண்பொருள் கோட்பாட்டியலிலும் யாக்ஞவல்கியரின் அபார அறிவியல் ஆற்றல் பற்றிய தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் - கீதா தெய்வ சிகாமணியின் கைவண்ணத்தில் தமிழ்க் கவிதையாகி நம்மைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பல ஆன்மிகச் சான்றோர்களின் அற்புதமான, பக்திரசம் நிறைந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள அம்மன் தரிசனம்.