முகப்பு » ஆன்மிகம் » அருள்மிகு கருப்பசாமி

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

விலைரூ.1500

ஆசிரியர் : தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா

வெளியீடு: ஓங்காரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் செய்திகளையும், ஒரு சேரத் தொகுத்தளிக்கும் பிரமாண்டமான நூல் இது. பழங்கால முறைப்படி சிக்குப்பலகையில் தூக்கி வைத்தே படிக்க இய<லும்.
இந்த நூலே கருப்பணசாமிக்கு எழுப்பப்பட்ட, ஒரு புனித கோவில் என்னுமளவுக்கு ஏராளமான வண்ணப்படங்கள் உள்ளன. "சந்தோஷம் என்னும் மந்திரச் சொல்லை சதா சர்வ காலமும் உச்சரித்து, உலக மக்களை வாழ்த்திக் கொண்டிருக்கும், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவே  இந்த நூலை எழுதித் தொகுத்திருக்கிறார், என்பது கூடுதல் சிறப்பு.
அழகர் கோவிலில் உள்ள, 18 -ஆம் படி கருப்பசாமியின் வரலாறு, கருப்பசாமி, கொள்ளையர்களிடமிருந்து பக்தர்களை காத்தது, கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறி, விருத்தாசலம் அருகே பக்தர்களைச் சிறைமீட்டு, நீதியை நிலைநாட்டியது, பரிசோதிக்க முயன்ற வெள்ளையருக்குப் பாடம் கற்பித்தது, போன்ற பல செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகம், புதுவை, கேரளம் மட்டுமல்லாது, திருப்பதி, அந்தமான்,
மலேசியா போன்ற இடங்களில் கருப்பசாமி கோவில் மகிமைகளும் இடம்பெற்றுள்ளன. கருப்பசாமிக் களஞ்சியம் என்றே புகழத்தக்க இந்த நூல், ஒவ்வொரு இல்லத்திலும் இருப்பது சிறப்பு எனலாம்.
புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் செய்திகளையும், ஒரு சேரத் தொகுத்தளிக்கும் பிரமாண்டமான நூல் இது. பழங்கால முறைப்படி சிக்குப்பலகையில் தூக்கி வைத்தே படிக்க இயலும்.
இந்த நூலே கருப்பணசாமிக்கு எழுப்பப்பட்ட, ஒரு புனித கோவில் என்னுமளவுக்கு ஏராளமான வண்ணப்படங்கள் உள்ளன. "சந்தோஷம் என்னும் மந்திரச் சொல்லை சதா சர்வ காலமும் உச்சரித்து, உலக மக்களை வாழ்த்திக் கொண்டிருக்கும், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவே  இந்த நூலை எழுதித் தொகுத்திருக்கிறார், என்பது கூடுதல் சிறப்பு.
அழகர் கோவிலில் உள்ள, 18 -ஆம் படி கருப்பசாமியின் வரலாறு, கருப்பசாமி, கொள்ளையர்களிடமிருந்து பக்தர்களை காத்தது, கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறி, விருத்தாசலம் அருகே பக்தர்களைச் சிறைமீட்டு, நீதியை நிலைநாட்டியது, பரிசோதிக்க முயன்ற வெள்ளையருக்குப் பாடம் கற்பித்தது, போன்ற பல செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகம், புதுவை, கேரளம் மட்டுமல்லாது, திருப்பதி, அந்தமான்,
மலேசியா போன்ற இடங்களில் கருப்பசாமி கோவில் மகிமைகளும் இடம்பெற்றுள்ளன. கருப்பசாமிக் களஞ்சியம் என்றே புகழத்தக்க இந்த நூல், ஒவ்வொரு இல்லத்திலும் இருப்பது சிறப்பு எனலாம். 

Share this:

வாசகர் கருத்து

- ,

super

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us