சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40.
சிற்சிலத் திரைப்படப் பாடல்கள் தேன் கிண்ணத்தில் வார்த்த, தெவிட்டாத அமிர்தமாக, என்றென்றும் இனிப்பதற்கு, அவை பெரும்பாலும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமையப் பெற்றதினால் தான்! சங்கீத மும்மூர்த்திகளின் தெய்வீகக் கீர்த்தனங்கள் மட்டுமின்றி, அவர்களைத் தொடர்ந்த ஸ்வாதித் திருநாள், மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் மற்றும் தற்காலக் கவிஞர்கள் இயற்றிய பாடல்களின் முதற்சில வரிகளுடன் கர்நாடக ராகங்களின் பெயர்கள் இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் பிரபல ரிகார்டிங் கம்பெனிகள், முன்னணிப் பாடகர்களை வைத்து "தனி' ரிகார்டுகளாக வெளியிட்டு, தங்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டனர். இந்தத் தனிப்பாடல்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.படம் - பாடியவர் எனும் தலைப்பின் கீழ், சாகித்யகர்த்தா, கவிஞர்களது பெயர்களைப் பட்டியலிட்டு, இப்பாடல்களை எல்லாம் அவர்கள் பாடியது போன்ற தவறான தகவலும், பெரும்பாலான பாடல்கள் இடம் பெற்ற சினிமாக்களின் பெயர்களைக் குறிப்பிடத்தவறியதும் இந்நூலில் காணப்படுகின்றன.