விலைரூ.200
புத்தகங்கள்
Rating
6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை-16.
(பக்கம்: 415)
முனைவர் வ.சுப., என தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்து மகிழ்ந்த தமிழறிஞர் வ.சுப.மணிமகனார் அவர்கள். பேராசிரியர் பெருமகனார் சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆங்கில நூலின் முடிவுகளை, விரிவாகவும் விளக்கமாகவும் பல ஆய்வுக் குறிப்புகளையும் இணைத்து தமிழில் இந்நூலினை தந்துள்ளார்.
அகத்திணை ஆராய்ச்சி, அகத்திணை பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணை குறிக்கோள், அகத்திணை பாட்டு, அகத்திணை புலவர்கள், அகத்திணை கல்வி என அகத்திணை துறையை சங்கப் பாடல்களை கருவாய் வைத்து, ஓர் அற்புதமான ஆய்வுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். 2,381 சங்கப் பாடல்களுள் 1,863 பாடல்கள் அகத்திணை சார்ந்த பாடல்கள். இப்பாடல் ஒவ்வொன்றிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளன.
இப்பாடல்களை கற்பவர் 3,727 காதல் உள்ளங்களை பற்றிய உணர்வும், அறிவும் பெறுவர் என, ஆழ ஆய்ந்து வடித்துத் தந்துள்ள ஆய்வு நூல். அகத்துறை சார்ந்த ஆய்வில், இதுநாள் வரை வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருவும் மேற்வற்றாகும் என்ற தொல்காப்பியர் நெறி சார்ந்தது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!