விலைரூ.175
புத்தகங்கள்
lettered Dialogue (ஆங்கிலநூல்)
விலைரூ.175
ஆசிரியர் : கே.ஆர்.ஏ.நரசய்யா
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கல்வி
Rating
(பக்கம்: 227)
இந்நூலில் ஆசிரியர் கிருத்திகா, சிட்டி என்ற இரு பெரிய மனிதர்கள் இடையில் இருந்த கடிதப் போக்குவரத்தைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
சிட்டி (பி.ஜி.சுந்தரரராஜன் - 1910-2006) கிருத்திகா(ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம் 1925-2009), இருவரும் மிகப்பெரிய சிந்தனையாளர்கள். இருவருமே தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த எழுத்தாளர்கள்.
சிட்டி சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். மணிக்கொடிகாலத்து மறுமலர்ச்சி எழுத்தாளர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றியவர்.இவர்கள், இருவரும் சந்தித்தது, 1955ம் ஆண்டில், கிருத்திகாவின் மகள் மீனா (இன்றைய தலை சிறந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி) திருமணம் முடிந்து பூதலிங்கம் தம்பதிசென்னை வழியாக டெல்லி திரும்புகையில், சிட்டி கிருத்திகா சந்திப்பு தமிழ் புது வருடத்தன்று நிகழ்ந்தது. அன்றிலிருந்து, தங்களுக்குள் ஆங்கிலத்தில் கடிதத்தொடர்பைத் துவங்கிய அவர்கள் காலமாகும் வரை, நிறுத்த வேயில்லை! அக்கடிதங்கள் இரு தரப்பிலும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
இக்கடிதங்களை நரசய்யா(சிட்டியின் தமக்கை மகன்) தொகுத்து, தேர்ந்தெடுத்து, அக்கடிதங்களுக்கு விளக்கங்களுடன் இப்போது கடிதங்களில் சம்பாஷணை என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஒரு அசாதாரணமான வேலை. எல்லா கடிதங்களுமே அவர்களது அறிவாற்றலையும், ஆழ்ந்த சிந்தனையையும் காட்டுகின்றன. தமிழ், ஆங்கில எழுத்தாளர்கள், அன்றைய நாட்டு நடப்புகள், கலை, சங்கீதம் எல்லாமே விவரிக்கப்படுகின்றன.மொத்தம், 20 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலின் சிறப்பு அதில், அடங்கியுள்ள விஷயப் பரிமாணமே! ஆங்கிலப் பட்டப்படிப்புக்கு உதவி செய்யுமளவுக்கு இந்நூலில் விஷயங்கள் உள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!