விலைரூ.1750
புத்தகங்கள்
Images of VARAHI - An Iconographic study
விலைரூ.1750
ஆசிரியர் : ஹரிப் பிரியா ரங்கராஜன்
வெளியீடு: சாரதா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
Delhi 1100035 (pages :222 + 99 Illus.)
நூலாசிரியர் இந்திய கலாசாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். வைஷ்ணவ நெறிகளில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் ஏராளம். தவிரவும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசகரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரங்கராஜன் வாழ்க்கைத் துணைவியார் ஆவார்.
இப்புத்தகம் தமிழகத்தில், "ஜேஷ்டா தேவி அல்லது "மூதேவி என்றழைக்கப்படும் தெய்வம் பற்றிய அருமையான தகவல்களைத் தரும் ஆய்வு நூல்.
நாம் காலம் காலமாக அழைக்கும் "மூதேவி என்ற பெயர் தவறானது. அது "முதல்தேவி என்று குறிப்பிட்டு அழகாக ஆதாரங்களைத் தொகுத்திருக்கிறார். சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பின்பும் இருப்பவள். பிரளயம் முடிந்ததும் எஞ்சி நிற்பது புகை என்று அதற்கு ஆதாரம் கூறி, தேவர்களுக்கும் முதல் தோன்றியவர் என்று விளக்கி, அதனால் முதல் தேவி என்று நிறுவுகிறார்.
ஜேஷ்டா தேவி சிற்பத்தில் அவள் முறம் வைத்திருக்கும் பாங்கை விவரித்து, முறத்தில் நெல், பதர் பிரிக்கப்படுவது போல, பக்குவப்படாத ஆன்மாக்களை அவள் அகற்றுவதை விளக்குகிறார். அதைவிட முதல் தேவியின் வாகனமாக கழுதை ஏன் என்பது சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அழுக்குத் துணிகளை சுமந்து சென்று, அதை அடித்துத் துவைத்து தூய்மையாக்கி, அதையே திரும்பச்சுமப்பது கழுதைக்குரிய செயல். அம்மாதிரி ஆன்மாக்களை தூய்மைப்படுத்தும் தேவி ஜேஷ்டா தேவியாவார்.
அப்படியானால், ஏன் மூதேவியைப் புறக்கணிக்கும் வழக்கம் வந்தது என்ற கேள்விக்கு தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலத்தில், மக்கள் மனதை வைணவத்தில் ஈர்க்க, விஷ்ணுவும், நாராயணனும் லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
அருமையான ஆய்வுகளை உள்ளடக்கிய நல்ல நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!