விலைரூ.70
புத்தகங்கள்
ராஜராஜசோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்
விலைரூ.70
ஆசிரியர் : சி. இளங்கோ
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
பகுதி: வரலாறு
Rating
பக்கம்: 112
முனைவர் சி.இளங்கோ தொல்லியல் துறையில், பல அரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு, பழமையான வரலாற்றுச் செய்திகளைப் புதிய போக்கில் பதிவு செய்து கொண்டு வருகின்ற பெருமகனார். அவ்வப்போது ஊர்தோறும் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்றபோது, ராஜராஜசோழனின் காந்தளூர்ச்சாலை போர் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு, அதன் விளைவாக எழுந்த ஆய்வு நூல்தான் இந்நூல்.
அரிது முயன்று, பல சரித்திர கள ஆய்வாளர்களது இப்போர் பற்றிய செய்திகளை ஒப்பு நோக்கி தனது பார்வையில், இவர் ஆய்ந்து பதிவு செய்யப்பட்ட அந்நூலில் செய்திகளும் அருமை. சோழர் மரபின் தொன்மையும், தொல் கதைகளும், பிற்காலச் சோழர்களில் ராஜராஜன், காந்தளூர்ச் சாலை குறித்து நடுகல் குறிப்பு, வேதமாட சாலைகள், கடிகைகள், காந்தளூர்ச்சாலை விவாதம் இன்று வரை துணை நூற்பட்டியல் இணைப்பு என, நூல் நிறைவடைகிறது.
செங்கம் நதிக்கரையில் ராஜராஜ சோழன் காலத்து நடு கல் தரையில் படுக்கைவாட்டில் விழுந்துள்ளதனைக் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்த ஒரு கல்லில் உள்ள மெய்கீர்த்திகளை, மையக் கருவாய் வைத்து நூலாசிரியர் இவ்வரிய ஆய்வு நூலை தமிழுக்குக் கருவூலமாய் தந்துள்ளார் (பக்கம் 46) வாசகர்கள் பார்வைக்காகநடுகல்லின் படத்தையும் (பக்கம்:47) தந்துள்ளது பாராட்டத்தக்கது.
"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளிஎன்று பழைய வரியையும், கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் உள்ள மெய் கீர்த்தியில், "சாலை கலமறுத்து அங்குள்ள மலை ஆளர் தலை அறுத்து தக்க மாடிய் அழைக்கப்படும் தண்டார்துள என்ற வரிகளை வைத்து அற்புதமாய் ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். அரிய புகைப்படங்கள், அரிய இணைப்பில் எஸ்.தேசிக விநாயகம்பிள்ளை மற்றும் டி.கே.ஜோசப் அவர்களது வரலாற்றுக்குறிப்புகள் நூலுக்கு மகுடம் சூட்டுகின்றன. ஒவ்வொரு ஆய்வாளரும் படித்துப்பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!